Thursday, March 27, 2014

Tuesday, March 4, 2014

Kavithai



நகரத்து
வேகம்
கோபம்
போட்டி
பொறாமை
ஆத்திரம்
பணம்
பற்றிய உறவுகள்
வெக்கைகளுக்கு
மத்தியில்

சிறு பத்திரிக்கைகளில்
மழைத் துளிகளாய்
மழலை பேச்சாய்
வரும்
சிறு கதைகளின்
வாசிப்பு தான்

எனது பால்ய
இளமை கால
அழுத்தல் இல்லாத
அசிங்கமில்லாத 
போலித்தனம்
பொறாமை அற்ற 
வாழ்வின் ஈரங்களை
அவ்வப்போது
மனதில்
தூறிக் கொண்டிருக்கிறது