பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி
எதேனும் ஒரு நண்பன்
கூட படித்த அனைவரின் தகவல்களும்
தெரிந்து வைத்து இருக்கிறான்
எத்தனை வருடம் பின்னரும்
Wednesday, October 19, 2011
காசுதான் கொடுத்து சாப்பிடுகிறோம் என்றாலும் ஏதேனும் ஒரு நொடியில் உணவின் மீது மின்னி மறையும் காதல்? சாப்பிட்டு முடிந்ததும் "திருப்தியா" என கேட்கும் கண்களின் குருஞ்சிரிப்பும் சக்கரைபொங்கல் இடையே தட்டுப்படும் முந்திரி போல
Sunday, May 22, 2011
தம்பிக்கோ அண்ணனுக்கோ தன் சகோதரிகளிடம் வயதிலும் மனதிலும் பெரிதாய் ஆன பின் பாசம் காட்ட நேரிடும் தருணங்கள் மழை கால மதிய நேரத்தின் பனித்துளி போன்றது
அம்மா வெளியே சென்று இருக்கும் நேரங்களில் வீட்டின் மீதான அப்பாவின் கவனித்து கொள்ளும் நேரங்கள் கோடை கால மழை போன்றது
Tuesday, February 8, 2011
யாரேனும் மல்லிகை வைத்து அருகே நிற்கையில் உனது கழுத்தின் தீயிலும் என் கைகளின் தீயிலும் எரிய ஆரம்பித்து நம் கத கதப்பில் கருகி முடிந்து பழுப்பாய் கிடந்த மல்லிகையின் வாசத்தோடே உனக்கே உனக்கான உன் வாசமும் நிகழ்ந்த அறையின் வாசம்
Wednesday, February 2, 2011
எட்டாம் வகுப்பு கணக்கு சார் வராத பாட வேளை அறை நேரம் போல வருவது இல்லை எட்டி சுகம் பறித்து மயக்கங்கள் பருகும் அறையின் கண் கிடக்கும் நேரங்கள்