Wednesday, November 24, 2010

மனதுக்கு பிடித்த பாடல்
முன்பகல் வேளையில்
பக்கத்தில் எங்கோ ஒரு பிளாட்டில்
கேட்கும் சுகம் போன்றது
மீண்டும் நெஞ்சுக்குள் எட்டி பார்க்கும் காதல்

Friday, April 30, 2010

நீயும் நானும் சேர்ந்து குடித்த
சுவையில் ஏதேனும் wine
கிடைக்கையில் எல்லாம்
உனது வாசங்களும்
உனது ஆளுமையும்
நிகழ்வுகளும் உள்ளே இறங்கும்

Sunday, February 21, 2010

காடுகளும் மிருகங்களும் புதிது புதிதாய்

இன்று iPod ல் பாட்டு கேட்டாலும்,
சிறு வயதில் காத்திருந்து கேட்ட
இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனலும்
நெல்லை வானொலியின் நேயர் விருப்பம்
இனிப்பு போல் இல்லை

இன்று buffet ல் எல்லாம் கிடைத்தாலும்,
சிறு வயதில் காத்திருந்து சாப்பிட்ட
அப்பா வாங்கி வரும் சால்னா ஊறிய பரோட்டாவும்
கலர் கலராய் தேங்காய் பூ மிதக்கும் கடலை மிட்டாய்
சுகம் போல் இல்லை

அன்றைய காகிதங்கள்
இன்று computer lcd யாய்
நாளை காற்று வெளியில் விரியும் திரையில்
கவிதைகள் எழுதப்படலாம்

காடுகளும் மிருகங்களும் புதிது புதிதாய்

Wednesday, February 3, 2010

The Economic Times

Rediff

Ads

Live Traffic Feed (Map View)