Saturday, November 26, 2011

பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி
எதேனும் ஒரு நண்பன்
கூட படித்த அனைவரின் தகவல்களும்
தெரிந்து வைத்து இருக்கிறான்
எத்தனை வருடம் பின்னரும்

Wednesday, October 19, 2011

காசுதான் கொடுத்து
சாப்பிடுகிறோம் என்றாலும்
ஏதேனும் ஒரு நொடியில்
உணவின் மீது
மின்னி மறையும் காதல்?
சாப்பிட்டு முடிந்ததும்
"திருப்தியா" என கேட்கும்
கண்களின் குருஞ்சிரிப்பும்
சக்கரைபொங்கல் இடையே
தட்டுப்படும்
முந்திரி போல

Sunday, May 22, 2011

தம்பிக்கோ அண்ணனுக்கோ
தன் சகோதரிகளிடம்
வயதிலும் மனதிலும் பெரிதாய் ஆன பின்
பாசம் காட்ட நேரிடும் தருணங்கள்
மழை கால மதிய நேரத்தின்
பனித்துளி போன்றது
அம்மா வெளியே சென்று இருக்கும் நேரங்களில்
வீட்டின் மீதான
அப்பாவின் கவனித்து கொள்ளும் நேரங்கள்
கோடை கால மழை போன்றது

Tuesday, February 8, 2011

யாரேனும் மல்லிகை வைத்து
அருகே நிற்கையில்
உனது கழுத்தின் தீயிலும்
என் கைகளின் தீயிலும்
எரிய ஆரம்பித்து
நம் கத கதப்பில் கருகி முடிந்து
பழுப்பாய் கிடந்த மல்லிகையின்
வாசத்தோடே உனக்கே உனக்கான
உன் வாசமும் நிகழ்ந்த
அறையின் வாசம்

Wednesday, February 2, 2011

எட்டாம் வகுப்பு கணக்கு சார்
வராத பாட வேளை அறை
நேரம் போல வருவது இல்லை
எட்டி சுகம் பறித்து மயக்கங்கள் பருகும்
அறையின் கண் கிடக்கும் நேரங்கள்

Blog Archive

The Economic Times

Rediff

Ads

Live Traffic Feed (Map View)