Thursday, November 22, 2012

முகங்கள்

சில முகங்கள் பார்த்தது
சில நாட்களே என்றாலும்
எவ்வளவு வருடம் பின்னரும்
அதன் சாயல் மனதில் படிந்து விடும்
சிம்னி விளக்கின் புகை போல

கல்லூரி வாழ்க்கையில்
ஹிந்தி சினிமா புரிவதற்க்காகவே 
சில நாட்கள் சென்ற
திருநெல்வேலி தெற்கு பஜார்
காலை ஆறு மணி  ஹிந்தி வகுப்பின்
கூட படித்த ஒரே பெண்
ஒரு நாள் பேனா (कलम) ( :-)) தந்த
அந்த பெண்
ஒரு நாள் காலையிலே கண்கள் கலங்க இருந்த
அவளின்  முகமும்
அதில் ஒன்று

Sunday, October 14, 2012

ஒரு வெள்ளி கிழமை
இளங் காலை
நெரிசல் மிகுந்த
'லிப்ட்'  இல் மிக அருகில்
இருந்த ஒரு பெண்ணின்
சாயம் பூசிய ஈர உதடுகள்
நிறைத்த வாசம்

மதுவின் ஈரத்தோடு
உன்னை முத்தமிட்ட
உதட்டுச்சாயத்தின் சாயலோடு
பொருந்திப் போவதின் ரகசியம்,
சிவப்பு உதட்டுச்சாயத்தின் வாசமா?
இல்லை உன் முத்த நினைவுகளின் வாசமா?

The source of the event occurred on 10/12/2012, Friday at Chennai, AGS Cinemas Villivakkam for 6:30 AM movie show where I had seen only one woman in our lift crowd. I could not take my eyes from her lips which was like Rose petals just showered from the rain, the smell filled in the lift room.
முதல் முத்தம்  என்பது
ஒரு முறை நிகழ்வு அல்ல
பருவ முட்டலின் முதல் முத்தம்
காதலியின்  திருட்டு முத்தம்
உரிமையான முதல் முத்தம்
உதட்டுச்சாயத்தின்  முதல் முத்தம்
ஒவ்வொரு முதல் முத்தமும்
அழகாய் மலர்கிறது

Sunday, February 12, 2012

நம் காதல் புனிதமானது.
அதனால்தான்
நீ எங்கோ நலம்.
நானும் நலம்.
நாம் சேர்ந்திருந்தால்
நீயோ நானோ
காதலை மிகவும்
அசுத்தமாக்கி இருப்போம்
ஹாப்பி VALENTINES டே

Tuesday, January 17, 2012

நீ என் காதலி அல்ல
என் முட்டாள் தனங்களை புரிய வைத்தவள்.

உனது வெறுப்பு
கோப விதைகளை கொண்டு தான்
நான் எனக்கான தைரியம் அதிகமும்
கொஞ்சம் வெற்றியும் விளைவித்து கொண்டேன்.
அதில் களைகளாய் கெட்ட பழக்கங்களும்.
 
உன்னால் தான்
பெண் தோழமையின் அத்து மீறலின் அழகும்
ஆண் தோழமையின் வரம்பும்
எனக்கு கை வந்தது.

முதல் உண்மை  காதல் தோற்பது நல்லது
அதில் நீங்கள் உங்களை படிக்கலாம்
உலகம் படிக்கலாம்

நீ என் காதலி அல்ல
என் குரு.

Blog Archive

The Economic Times

Rediff

Ads

Live Traffic Feed (Map View)