பிடித்த பெண்ணிடம்
பேசும்/இருக்கும் போது
சின்ன பையனாய்
மாறி நிற்கும்
குழந்தைத்தனமான
நேரம்
மிக அழகு
மே மாத
விடுமுறை நேர
ஊரின்
நீண்ட நேர பேருந்தில்
கணமொரு தடவை
ஜன்னல் சட்டத்தில்
விரியும் ஓவியங்கள்
பிரதி
எடுக்க முடியாத
அழகிய பதிவுகள்
மகளின் கன்னத்து முத்த
அன்பின் ஈரங்களில்
காதலியின் உதட்டு முத்த
காம எச்சில்கள்
உலர்ந்து விடும்
எனக்கு அவளிடம்
பெரிதாய்
ஏதும் ஆசை இல்லை
அவள்
கைகளின்
சிறு வயது
தடுப்பூசி
தழும்புகளை
பார்ப்பதன்றி
நட்பின்
பிரிவு வலி
உணர்ந்தேன்
நண்பன் அவன்
அமெரிக்க பயணத்தின்
முந்தைய
தொலைபேசிய இரவின்
கனமான
கணங்கள்