இன்று iPod ல் பாட்டு கேட்டாலும்,
சிறு வயதில் காத்திருந்து கேட்ட
இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனலும்
நெல்லை வானொலியின் நேயர் விருப்பம்
இனிப்பு போல் இல்லை
இன்று buffet ல் எல்லாம் கிடைத்தாலும்,
சிறு வயதில் காத்திருந்து சாப்பிட்ட
அப்பா வாங்கி வரும் சால்னா ஊறிய பரோட்டாவும்
கலர் கலராய் தேங்காய் பூ மிதக்கும் கடலை மிட்டாய்
சுகம் போல் இல்லை
அன்றைய காகிதங்கள்
இன்று computer lcd யாய்
நாளை காற்று வெளியில் விரியும் திரையில்
கவிதைகள் எழுதப்படலாம்
காடுகளும் மிருகங்களும் புதிது புதிதாய்