Thursday, November 6, 2014

தற்செயலாய்
தொலைக்காட்சியில்
காண கிடைத்த
அழகிய சினிமா
போல
எதிர்பாராது
வாழ்க்கையும்
சில வேளையில்
அழகு

Tuesday, July 1, 2014

அவித்த கொண்டைக்கடலையின்
மேலெல்லாம்
எனது ஊர்
கோடைகால
விடுமுறை  வேத வகுப்பின் (VBS)
பள்ளிக்கூட
இலுப்பை மர
நிழல்
மைதா கோந்தின்
வாசம்

Monday, June 23, 2014

காலையில் அழகாய்
குழந்தைகள் மருத்துவமனை முன்பு
பொம்மை கடை விரிப்பவனுக்கு
கண்டிப்பாய் பணம் மட்டுமே
நோக்கமாய் இருக்காது

Sunday, May 11, 2014

பசப்பாய் சிரிக்கும் உறவுகள் 
மத்தியில் 
பாசமாயும் சிரிக்கும்
சில உறவுகள்
இதனால் தான் 
உறவுகளின் உன்னதம் 
இன்னும் உலராமல் 
இருக்கிறது 

Thursday, March 27, 2014

Tuesday, March 4, 2014

Kavithai



நகரத்து
வேகம்
கோபம்
போட்டி
பொறாமை
ஆத்திரம்
பணம்
பற்றிய உறவுகள்
வெக்கைகளுக்கு
மத்தியில்

சிறு பத்திரிக்கைகளில்
மழைத் துளிகளாய்
மழலை பேச்சாய்
வரும்
சிறு கதைகளின்
வாசிப்பு தான்

எனது பால்ய
இளமை கால
அழுத்தல் இல்லாத
அசிங்கமில்லாத 
போலித்தனம்
பொறாமை அற்ற 
வாழ்வின் ஈரங்களை
அவ்வப்போது
மனதில்
தூறிக் கொண்டிருக்கிறது

Sunday, February 16, 2014



அவள் மேல்  இருப்பது
வெறும் காமம்
மட்டுமல்ல  
என்பதை
எப்படி அவளுக்கு
புரிய வைப்பது

Friday, February 14, 2014

காமமும்
காட்டு மிருகம்
போல் தான்

வேட்டையாடிய/
பசியாறிய பின்
அமைதலாய்
துயில்வதுண்டு

Tuesday, February 4, 2014


திரும்பி பார்க்கையில்
எல்லாமே அழகு

பெண்கள்
காயங்கள்
காதல்
வலி
வகுப்புகள்


குளித்தது என்னவோ
அவள் தான்
ஆனால்
ஈரங்கள் என்னில்

Blog Archive

The Economic Times

Rediff

Ads

Live Traffic Feed (Map View)