நீ என் காதலி அல்ல 
என் முட்டாள் தனங்களை புரிய வைத்தவள்.
உனது வெறுப்பு 
கோப விதைகளை கொண்டு தான்
நான் எனக்கான தைரியம் அதிகமும் 
கொஞ்சம் வெற்றியும் விளைவித்து கொண்டேன்.
அதில் களைகளாய் கெட்ட பழக்கங்களும். 
  
உன்னால் தான்
பெண் தோழமையின் அத்து மீறலின் அழகும் 
ஆண்  தோழமையின் வரம்பும் 
எனக்கு கை வந்தது.
முதல் உண்மை  காதல் தோற்பது நல்லது
அதில் நீங்கள் உங்களை படிக்கலாம்
உலகம் படிக்கலாம்
நீ என் காதலி அல்ல 
என் குரு.


 
 
