சில முகங்கள் பார்த்தது
சில நாட்களே என்றாலும்
எவ்வளவு வருடம் பின்னரும்
அதன் சாயல் மனதில் படிந்து விடும்
சிம்னி விளக்கின் புகை போல
கல்லூரி வாழ்க்கையில்
ஹிந்தி சினிமா புரிவதற்க்காகவே
சில நாட்கள் சென்ற
திருநெல்வேலி தெற்கு பஜார்
காலை ஆறு மணி ஹிந்தி வகுப்பின்
கூட படித்த ஒரே பெண்
ஒரு நாள் பேனா (कलम) ( :-)) தந்த
அந்த பெண்
ஒரு நாள் காலையிலே கண்கள் கலங்க இருந்த
அவளின் முகமும்
அதில் ஒன்று