Friday, February 14, 2014

காமமும்
காட்டு மிருகம்
போல் தான்

வேட்டையாடிய/
பசியாறிய பின்
அமைதலாய்
துயில்வதுண்டு

Tuesday, February 4, 2014


திரும்பி பார்க்கையில்
எல்லாமே அழகு

பெண்கள்
காயங்கள்
காதல்
வலி
வகுப்புகள்


குளித்தது என்னவோ
அவள் தான்
ஆனால்
ஈரங்கள் என்னில்

Monday, July 8, 2013

மழைக்காலம்

மழைக்கால
இளங்காலையில்
தலைக்கு
குளித்து எதிர்ப்படும் பெண்
குதித்து நடக்கும் குற்றாலம்
இடம் பெயரும் இமயமலை
கூந்தல் வாசமோ
மழை பெய்த
அசோகவனம்.

மழைக்கால
இளங்காலையில்
பள்ளி சிற்றூர்தியின்
முன் இருக்கையில்
அமர்ந்து தூங்கும்
சீருடைச் சிறுமியின்
தூக்கம்
ஒரு அழகிய ஓவியம்
போன்றதொரு  தியானம். 

Sunday, April 7, 2013

எனக்கு இன்றைய அரசியல்
ஆர்வமில்லை
என்றாலும்
சிறு வயதில்
அப்பாவின் கட்சிக்காக
சுவர் விளம்பரங்கள்
வரைந்து
சுவர் ஒட்டிகள்
ஒட்டியதுண்டு.
காங்கிரஸ்
தோற்றபோது
சின்னதாய்
வருந்தியதுண்டு.

Thursday, November 22, 2012

முகங்கள்

சில முகங்கள் பார்த்தது
சில நாட்களே என்றாலும்
எவ்வளவு வருடம் பின்னரும்
அதன் சாயல் மனதில் படிந்து விடும்
சிம்னி விளக்கின் புகை போல

கல்லூரி வாழ்க்கையில்
ஹிந்தி சினிமா புரிவதற்க்காகவே 
சில நாட்கள் சென்ற
திருநெல்வேலி தெற்கு பஜார்
காலை ஆறு மணி  ஹிந்தி வகுப்பின்
கூட படித்த ஒரே பெண்
ஒரு நாள் பேனா (कलम) ( :-)) தந்த
அந்த பெண்
ஒரு நாள் காலையிலே கண்கள் கலங்க இருந்த
அவளின்  முகமும்
அதில் ஒன்று

The Economic Times

Rediff

Ads

Live Traffic Feed (Map View)